சினேகனுக்கு செய்தது சரியல்ல: ஆர்த்தி கருத்து

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற டாஸ்க்கில் கடைசிவரை சினேகனும்,சுஜாவும் தாக்குப்பிடித்து வந்தனர். இதில் கணேஷ் வெங்கட்ராம் பிக்பாஸிடம் சினேகன் ஏமாற்றுவதாக புகார் கூறியதை அடுத்து அவர் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த சினேகன் இந்தவாரம் கமல்ஹாசனிடம் கூறிவிட்டு தான் வெளியேறுவதாக கூறினார்.

இந்த நிலையில் காரின் ஓரத்தில் சினேகன்  கால் உரசியதற்காக அவர் தோல்வி அடைந்தார் என்று கூறுவது சரியில்லை என நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் சுஜா, சினேகன் ஆகிய இருவருக்கும் புள்ளிகளை பகிர்ந்தளித்திருக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.