16 வயதில் நான் கற்பழிக்கப்பட்டேன் என அமெரிக்க தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளினி பத்மா லட்சுமி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரைத்துறையில் பாலியல் சீண்டல்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. சின்ன நடிகைகள் தொடங்கி பெரிய நடிகைகள் வரை அன்றாடம் யாராவது பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை கூறி வருகின்றனர். ஹாலிவுட்டிலும் இதே பிரச்சனை தான்.

இதையும் படிங்க பாஸ்-  அருவி படத்தில் நடிக்க மறுத்த இரண்டு பிரபல நடிகைகள் யார்?

அமெரிக்கவில் பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளினியான பத்மா பார்வதி லட்சுமி, கேரளாவில் பிறந்தவர் ஆவார். இவர் சிறு வயதிலேயே அமெரிக்காவிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில் 16 வயது இருக்கும் போது நான் ஒரு இளைஞனால் கற்பழிக்கப்பட்டேன். அந்த வயதில் அதை வெளியே சொல்லும் அளவு எனக்கு தைரியம் இல்லை என கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.