கடந்த சிலநாட்களாக நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் பாலிவுட் நடிகையும் மாடலுமான  ஆகார்ஷி சர்மா என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரை பின்னால் விரட்டி வந்த மர்ம நபர்கள் அவருடைய ஸ்கர்ட்டை பிடித்து இழுத்துள்ளனர்.
இதில் நிலை தடுமாறிய நடிகை இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்து காயமடைந்தார்.  இந்த சம்பவம் பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்தபோதும் யாரும் நடிகை ஆகார்ஷி சர்மாவுக்கு உதவவில்லை என்றும், ஒருசிலர் அவர் கீழே விழுந்ததை போட்டோ எடுத்ததாகவும் மனவருத்தத்துடன் அவர் கூறியுளார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர்களிடம் புகார் செய்ய இருப்பதாகவும் இருப்பினும் அவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்ததால்  அவர்கள் பிடிபடுவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு ஏற்பட்ட இந்த சம்பவம் குறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ள நடிகை ஆகார்ஷி சர்மா, தனக்கு ஏற்பட்ட காயங்களை புகைப்படம் எடுத்தும் அதனை பதிவு செய்துள்ளார்.