புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் ஒன்றை வாங்கி ரூ.20 லட்சம் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் நடிகை அமலாபால் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இருப்பினும் அவர் முன் ஜாமீன் வாங்கி வைத்திருந்ததால் உடனடியாக அவர் விடுதலை செய்யப்பட்டார்.

கேரளாவை சேர்ந்த அமலாபால், வரி ஏய்ப்பு செய்ய வேண்டும் என்பதற்காக புதுச்சேரியில் ரிஜிஸ்டர் செய்து புதிய சொகுசுக்கார் ஒன்றை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கேரள போலீசார் நேற்று அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை ஆஜரானா அமலாபால், கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வரி ஏய்ப்பு செய்ததாக சுரேஷ்கோபி, பஹத் பாசில் ஆகிய நடிகர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே