நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் ‘2.0’ படத்தில் தான் செய்த ஸ்டண்ட் பயிற்சி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழில் கடந்த 2010ல் வெளியான ‘மதராச பட்டினம்’ படத்தின் மூலம் தமிழ்திரையுலகில் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய்யுடன் ‘மெர்சல்’, தனுஷுடன் ‘தங்க மகன்’ , உதயநிதியுடன் ‘கெத்து’ உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.தற்போது ‘2.0’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பார். இந்நிலையில் ‘2.0’ படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் சில சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள் சென்னைக்கு வந்தனர். அப்போது தான் நடித்த  முதல் சண்டை பயிற்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த வீடியோவை பார்த்த அவரின் ரசிகர்கள் மற்றும் திரைதுறையினர் எமி ஜாக்சனை பாராட்டி வருகின்றனர்.