பிக்பாக்கெட் அடிக்கும் கலையை மிஷ்கினிடமிருந்து கற்றுகொண்டேன்: நடிகை ஓப்பன் டாக்

விஷால் தற்போது நடித்து வரும் படம் துப்பறிவாளன். மிஷ்கின் இயக்கத்தில் வளர்ந்துவரும் இந்த படத்தில் அனு இம்மானுவேல் நாயகியாக நடித்துவருகிறார். கதைப்படி இவர் ஒரு பிக்பாக்கெட் அடிக்கும் பெண் வேடம். இந்த வேடத்திற்காக பிக்பாக்கெட் எப்படி அடிப்பது என்பதை மிஷ்கின் அனுவிற்கு சொல்லிக்கொடுத்துள்ளார்.

இது குறித்து நடிகை அனு இம்மானுவேல் கூறுகையில், மிஷ்கின் சாரை மிகவும் கோபக்காரன் என்று கூறுகின்றனர்.ஆனால் ஏன் அவ்வாறு கூறுகின்றனர் என்று தெரியவில்லை?. என்னைப் பொறுத்தவரை அவருடன் பணியாற்றியது சந்தோஷமான அனுபவம். அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன இந்த படத்தில்  நான் பிக் பாக்கெட் அடிக்கும் பெண்ணாக நடித்துள்ளேன். இதற்காக மெனக்கெட வேண்டாம் என்றும், நான் சொன்னதைச் செய்தாலே போதும் என்றும் மிஷ்கின் சார் கூறினார். இதன்மூலம் பிக் பாக்கெட் என்னும் கலையை வெகு எளிதாக அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்று கூறினார் அனு இம்மானுவேல்.