ஆபாசமாக படமெடுத்த வாலிபரை சாரமாரியாக பளார் விட்ட நடிகையால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வைதராபாத் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு விஜயபிரகாஷ் என்ற கல்லூரி பேராசிரியர் வந்தார். அவருடன் சின்னத்திரை நடிகை ஒருவரும் பயணம் செய்தார். அப்போது விஜய் பிரகாஷ் அந்த நடிகையை தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட நடிகை அந்த படங்களை டெலிட் செய்யுமாறு கூறியுள்ளார்.

அதற்கு அந்த வாலிபர் தான் அந்தமாதிரி படங்கள் எடுக்கவில்லை என்று வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை அந்த வாலிபரை சராமரியாக தாக்கியுள்ளார். மேலும் இது குறித்து விமான நிலைய போலீஸாரிடம் புகார் செய்தார். இதையடுத்து விஜய பிரகாஷ் செல்போனை சோதனை செய்தனர் போலீஸார், அதில் அந்த நடிகையை பல்;அ கோணங்களில் அவர் படம் பிடித்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கடுமையாக எச்சரித்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.