காலா பட வில்லன் நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் தான் நானா படேகர். இவர் 2008ல் வெளியான பொம்மலாட்டம் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகர் ஆவார். இவரின் நடிப்புத் திறமையை பாராட்டி இவருக்கு மூன்று முறை தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. சினிமாவைத் தாண்டி இவர் பல சமூக சேவைகளை செய்து வருகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  இருசக்கர வாகனத்தில் சென்ற நடிகையின் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்த மர்ம நபர்கள்

இந்நிலையில் விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் ஹீரோயின்களில் ஒருவரான தனிஶ்ரீ தத்தா, நானே படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். படப்பிடிப்பின் போது தகாத இடங்களில் கை வைத்து தனக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக கூறியுள்ளார். இதனை வெளியே கூறியதால் அவரின் ஆட்கள் தன்னையும் தன் குடும்பத்தாரையும் மிரட்டியதாக பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது பாலிவுட்டில் மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  லெஸ்பியன் பிடிக்கும் தான் அதுக்கு என்னா இப்ப!!! சீறிய நடிகை