annapoorna daughter

பழம்பெரும் நடிகை அன்னபூர்ணா மகள் கீர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் அன்னபூர்ணா. இவரது மகள் கீர்த்தி. இவர் கடந்த 2013ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு பிறந்த குழந்தை வாய் பேசமுடியாத நிலையில் இருந்துள்ளது. இதனால் கீர்த்திக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்தனர்.

இந்த நிலையில் கீர்த்தி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.மகளின் குறைபாடு காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் காணப்பட்ட அவர் இந்த முடிவௌ எடுத்ததாக கூறப்படுகிறது.