சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு வீட்டில் அடிக்கடி தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு நடப்பது வழக்கம். இந்த நிலையில் வழக்கம்போல் ஒரு பிரபல நடிகை நடித்த தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு நடந்துள்ளது.

படப்பிடிப்பு முடிந்ததும் அந்த நடிகை உடை மாற்றுவதற்காக ஒரு அறைக்கு சென்றார். அப்போது மறைந்திருந்த வாலிபர் ஒருவர் அந்த நடிகையை தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது

இதனை கண்டு அலறிய அந்த நடிகையின் கூச்சலை கேட்டு படக்குழுவினர் விரைந்து வந்து அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரின் செல்போன் அடித்து நொறுக்கப்பட்டதோடு, அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். ஆனாலும் இதுகுறித்து நடிகையின் தரப்பில் போலீஸ் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.