மனதுக்குள் அழும் பளபள நடிகை..

ஏற்கனவே வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற பிரமாண்ட படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்துக் கொண்டிருப்பதால் அப்படத்தின் தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், முதல் பாகத்தில் கதாநாயகனுடன் டூயட் பாடிய பளபள நடிகை மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறாராம். ஏனெனில், இந்த பாகத்தில் அவர் சில காட்சியில் மட்டுமே தலை காட்டுகிறார். அதுவும் படத்தின் இறுதியில் மட்டுமே. இந்த பாகத்திலும், உனக்கு அதிக முக்கியத்துவம் இருக்கு என கூறிய இயக்குனர், படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் மட்டுமே அவரை காட்டியுள்ளதால், மனதுக்குள்ளேயே அழுது புலம்புகிறாராம்.