கழற்றி விட சொன்ன காதலர் – ஓ.கே. சொன்ன நம்பர் ஒன் நடிகை

பல வருடங்களாக தன்னிடம் உதவியாளராக பணிபுரிந்தவரை கழற்றி விடும் முடிவில் நம்பர் ஒன் தாரா நடிகை இருப்பதாக தெரிகிறது.

பல வருடங்களாக பணிபுரிந்த தன்னுடைய உதவியாளரும், நடிகையும் தமிழ் திரையுலகில் சகோதரன், சகோதரி போல் வலம் வந்தவர்கள். தான் கலெக்டராக நடிக்கும் படத்திற்கு அவரையே தயாரிப்பாளர் ஆக்கினார் நடிகை. அந்த படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளியாக இருக்கிறது.

தற்போது நடிகையில் விவகாரங்களில் தலையிட்டு வரும் அவரின் காதலரான சிவ இயக்குனர், அந்த உதவியாளரை கழற்றி விட சொல்லி விட்டாராம். காதலன் என்ன சொன்னாலும் கேட்கும் நடிகையும் அதற்கு ஓகே சொல்லி விட்டாராம்.

இதனால் தனக்கு தெரிந்தவர்களிடம் இதை சொல்லி புலம்பி தவிக்கிறாராம் அந்த உதவியாளர்.

நடிகைக்கு இது அடுக்குமா?..