நடிகை ஜெயசித்ரா இவர் தமிழில் புகழ்பெற்ற நடிகை, இளமை ஊஞ்சலாடுகிறது,புதுப்புது அர்த்தங்கள்,மாமன் மகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மகன் அம்ரீஷ் இசையமைப்பாளர் ஆவார்.
சினிமா பைனான்சியர் அசோக் லோதா என்பவர் சென்னை யானைக்கவுனி போலீஸ்நிலையத்தில் தன்னை கார் புரோக்கர் இளம்முருகன் என்பவர் காசோலை கொடுத்து மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில் ஜெயசித்ராவிடமும், இன்னொரு நடிகரிடமும் இளம்முருகன் மோசடி செய்திருந்தார் என்று கூறியிருந்தார்.
போலீசார் விசாரித்து இளம்முருகனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
என்னிடம் இளம்முருகன் மோசடி செய்தது உண்மை தான். சென்னை ரங்கராஜபுரத்தில் 750 சதுரடியில் எனக்கு சொந்தமான வீடு உள்ளது.
அந்த வீட்டில் இளமுருகனும் அவரது மனைவி மீனா இளமுருகனும் வாடகைக்கு இருந்தனர். 12 ஆண்டுகளாக எனக்கு வாடகை தராமல் ஏமாற்றினார்கள்.
வீட்டையும் காலி செய்ய மறுத்தனர். இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, குறிப்பிட்ட தொகையை வாங்கினேன். இன்னும் ரூ.7 லட்சம் பாக்கி உள்ளது.
இளம்முருகன் வீட்டை காலி செய்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனாலும் அவர் காலி செய்யவில்லை. கோர்ட்டிலும் தவறான தகவல்களை அளித்து ஏமாற்றி விட்டார்
இளமுருகனால் நான் பெரியளவில் மனஉளைச்சலுக்கு ஆளானேன். அந்த வீட்டை எப்படியாவது அபகரித்து விட வேண்டும் என்று திட்டமிட்டார். இதற்காக எனக்கு எதிராக வீட்டை சுற்றி சூனியம் வைக்கப்பட்டது. வீடும் சேதப்படுத்தப்பட்டது. கோர்ட்டு மூலம் எனக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.