பழம்பெரும் நடிகை ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதி

எம்.ஜி.ஆர் நடித்த படகோட்டி, முகராசி, சிவாஜி கணேசன் நடித்த கர்ணன், இருவர் உள்ளம் மற்றும் ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் ஆகியோர் நடித்த பல படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை ஜெயந்தி.

குறிப்பாக கே.பாலசந்தர் இயக்கிய அதிகமான படங்களில் நடித்துள்ளார். எதிர் நீச்சல், நீர்க்குமிழி, இரு கோடுகள், வெள்ளிவிழா, பாமா விஜயம், புன்னகை, வெள்ளிவிழா, ஆகிய படங்கள் பாலசந்தரின் இயக்கத்தில் ஜெயந்தி நடித்த வெற்றி படங்கள் ஆகும்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் சரோஜாதேவி போல் தமிழ் ரசிகர்களின் அன்பை பெற்றிருந்தார்.

இந்த நிலையில் நடிகை ஜெயந்திக்கு இன்று காலை திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் பெங்களூர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஸ்துமா தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கும் டாக்டர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கவனித்து வருகின்றனர்.