மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மகள் ‘ஜான்வி கபூர்’ தற்போது அர்ஜுன் ரெட்டி படத்தின் நடிகர் ‘விஜய் தேவரகொண்டா’வுடன் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.  

 

போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மூத்த மகள் ‘ஜான்வி கபூர்’.அண்மையில் ‘தடக்’ படத்தில் கதா நாயகியாக இந்தி திரையுலகில் அறிமுகமானார்.தற்போது அடுத்தடுத்த இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

போனி கபூர் மற்றும் அவரின் முதல் மனைவி மோனாவிற்கு பிறந்தவர் தான் ‘அர்ஜுன் கபூர்’. இந்நிலையில் தன் அண்ணன் அர்ஜுன் கபூருடன் ‘காபி வித் கரண்’ ஷோவில் கலந்து கொண்டார் ஜான்வி. அப்போது கரண் ‘ஒருநாள் நீங்கள் தூங்கி எழும்போது ஒரு ஆண் நடிகராக நீங்கள் இருந்தால், எந்த நடிகராக இருக்க வேண்டும்’ என்ற கேள்வியைக் ஜான்வியிடம் கேட்டார்.

அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல், ‘விஜய் தேவரகொண்டா’ என்றார். மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் விரைவில் நடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.