காவிரி பிரச்சனை குறித்த இறுதி தீர்ப்பு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கமல், ரஜினி, விஷால் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபகாலமாக பரபரப்பாக இருக்கும் நடிகை கஸ்தூரி இதுகுறித்து கவிதை வடிவில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அந்த கவிதை இதோ:

கழுதை தேய்ந்து கட்டெறும்பாயிற்று .
கட்டெறும்பும் தேய்ந்து குற்றுயிராயிற்று .
மண்டைப் பிளக்கும் வெயிலில் உழுபவன்
தொண்டை நனைக்க நீர்க்கு அழுபவன்
சண்டை போட்டாலும் சந்தியில் நின்றாலும்
கெண்டைக்கால் பற்றி கெஞ்சியே கேட்டாலும்
அண்டை மாநிலத்தார் மனதில் நீரில்லை…
அண்டிப்பிழைக்கும் ஈனமினி தேவையில்லை.

ஆற்றில் உள்ளது தீர்ப்பில் வரவில்லை – ஆனால்
காற்றும் மழையும் கொடுக்கும்.
வேண்டும் வளத்தை அளிக்கும்.
ஆண்டவன் அளப்பதையேனும் காத்திடுவோம்.
கள்ளுக்கும் குடுவைக்கும்
காவிரியை இழக்காமல்
மண்ணுக்கு ஆசைப்பட்டு
பெண்ணை சீரழிக்காமல்
நீருயர நெல்லுயுர
நீதியுடன் நாம் நடப்போம்.