கடந்த ஓராண்டுக்கு முன்பாக திருமணம் செய்துகொண்ட அருண் மற்றும் ஸ்ரீஜா தம்பதியை வாழ்த்தி நடிகை கஸ்தூரி பதிவு செய்திருந்த டுவீட்டை ஒருவர் அநாகரிகமாக கிண்டல் செய்துள்ளார்.

கடந்த அக்டோபர் 2018 ஆம் ஆண்டு அருண் என்பவர் ஸ்ரீஜா என்னும் திருநங்கையை கோவிலில் வைத்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், இவர்களுக்கு திருமண சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டது. அதனால் கடந்த ஒரு வருடமாகப் போராடி நேற்று திருமண பதிவு சான்றிதழ் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  காவி கமலும் கஸ்தூரி பதிலும்

இதைப் பலரும் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இந்த தம்பதியினரைப் பாராட்டி நடிகை கஸ்தூரி தனது டிவிட்டரில் பதிவு செய்திருந்தார். அதில் ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? தமிழகத்தின் முதல் அதிகாரப்பூர்வ ஆண்-திருநங்கை தம்பதி அருண்- ஸ்ரீஜா. புரட்சி தொடரட்டும். அன்பு மலரட்டும். வாழ்த்துக்கள்’ என ஒரு பதிவை பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  இந்த படத்தை பார்த்து ஷாக் ஆன ஐஸ்வர்யா ராஜேஷ்..

இதற்குப் பதிலளித்த நபர் ஒருவர் ‘மேட்டர் மட்டும்தான் பண்ண முடியும், குழந்தைக்கு எங்கே போவான். இதுல பாராட்டு வேற’ என அநாகரிகமாக கமெண்ட் செய்திருந்தார். அந்த நபர் தனது ப்ரொபைல் பிச்சராக அஜித் படத்தை வைத்திருந்தார். அவருக்குப் பதிலளித்த கஸ்தூரி ’இப்படி பேசுரவன் யாருனு பார்த்தா… ஓ.. ஓ.. அப்ப சரி அப்ப சரி… ’ எனக் கூறினார். ஏற்கனவே அஜித் ரசிகர்கள் சிலருக்கும் கஸ்தூரிக்கும் பல முறை வாக்குவாதங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.