2009 ம் ஆண்டு திருமணமான பிரபல மலையாள, தமிழ் நடிகை காவ்யா மாதவனுக்கு சில நாட்களிலே வாழ்க்கை கசப்புற்று விவாகரத்தானது.

திருமணத்திற்கு முன்பே திலீப்புடன் கிசுகிசுக்கப்பட்ட காவ்யா மாதவனுக்கு விவாகரத்தான நேரத்திலேயே திலீப் மஞ்சு வாரியர் விவாகரத்தும் ஒன்றாக அமைந்து விட திலீப், காவ்யா மாதவனின் முந்தைய காதல் உறுதியானது.

ஏற்கனவே உள்ள ஜோடியை பிரிந்த இவர்கள் புதிய ஜோடியாக உருவெடுத்து திருமண பந்தத்தில் இணைந்தனர்.

இந்நிலையில் பிரபல மலையாள நடிகை ஒருவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யவிருந்ததாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

ஜாமீனில் தற்போது திலீப் வந்திருக்கிறார். இந்த நிலையில் நடிகை காவ்யா மாதவன் கர்ப்பம் தரித்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.