நடிகர் நடிகையர் அரசியலில் குதிப்பது தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமின்றி அண்டை நாடான இலங்கையிலும் வழக்கமாகி வருகிறது.

இந்த நிலையில் இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அந்நாட்டு நடிகை மதுசா ராமசிங்கே என்பவர் விரும்பினார். தனது விருப்பத்தை அவர் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார்.

அதற்கு அந்த நபர் தேர்தலில் போட்டியிட உதவி செய்ய வேண்டுமானால் அதற்கு லஞ்சமாக தன் முன் நிர்வாணமாக நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை மதுசா, அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டதாக கூறப்படுகிறது.