பாலா தயாரித்து சிங்கம்புலி இயக்கிய மாயாவி படத்தில் தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் இந்த அழகிய பாடலை ரசிக்காதோர் இருக்க முடியாது. இந்த பாடலில் நடித்த ந்டிகையின் பெயர் விஷ்ணு பிரியா சென்னையை சேர்ந்த திருமணமாகியவர்.

இவரது கணவர் ரமேஷ்கிருஷ்ணன்

ரமேஷ்கிருஷ்ணன் சில மருத்துவ சிகிச்சைக்காக கொடைக்கானலில் சில வருடம் முன்பு வந்து குடும்பத்தோடு தங்கினார். அப்போது பிரபாகரன் என்ற டிரைவர் இவர்கள் குடும்பத்துக்கு அறிமுகமானார்.

பிரபாகரனுடன் விஷ்ணுப்பிரியா தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். இது விஷ்ணுப்பிரியாவின் தந்தைக்கு தெரிந்து இருவரையும் கண்டித்துள்ளார். பிரபாகரனுக்கு விஷ்ணுப்பிரியா காரும் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பிரபாகரன் கொலை செய்யப்பட்டு கொடைக்கானலில் சிட்டி வியூ பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

பிணத்தை கைப்பற்றி விசாரித்த போலீசுக்கு மேற்கண்ட இவை எல்லாம்தான் காரணம் என அறிந்து விசாரித்ததில் நடிகை விஷ்ணுப்பிரியாவின் தந்தைதான் இவர்களை கூலிப்படை வைத்து கொல்ல சொல்லி பணம் கொடுத்துள்ளார் அதன்படி செயல்பட்ட கூலிப்படையினர் வாடகை டிரைவரான பிரபாகரனை சவாரி அழைத்து செல்வது போல் சென்று கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் விஷ்ணுப்பிரியாவின் தந்தை கைது செய்யப்பட்டார்.