ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? நக்மா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ படத்தின் நாயகியும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான நடிகை நக்மா, நேற்று மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்த் அவர்களை அவரது போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடந்தது.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நக்மா, ‘ரஜினிகாந்த் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவருடன் இணைந்து திரைப்படங்களில் பணியாற்றியவர் என்ற முறையில் மரியாதை நிமித்தம் சந்தித்தேன். இந்த சந்திப்பில் அவருடன் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை.

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பது நான் உள்பட பொதுமக்களின் அனைவரும் விரும்புகிறோம். அவர் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக சாதிப்பார். ஆனால் அரசியலுக்கு வருவதும் வராததும் அவரது சொந்த விருப்பம்’ என்று கூறினார்

ஏற்கனவே பாஜகவினர் ‘குடியரசு தலைவர் பதவி உள்பட பல ஆசைகளை காட்டி ரஜினியை அரசியலுக்கு இழுக்க முயற்சித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவு செயலாளர் நக்மா சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.