பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை எல்லா இடங்களிலும் நடப்பதாக நடிகை பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.

நடிகை பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக இருந்து கவனம் பெற்று சின்னத்திரை தொடர்களில் நடித்து பின்னர் வெள்ளித்திரையில் கால் பதித்தார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

மேயாதமான் படத்தின் மூலம் அறிமுகமான பிரியா கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். தற்போது எஸ்.ஜே சூர்யா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் திருவொற்றியூரில் நேற்று ஒரு அழகு சாதன நிறுவனத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார் பிரியா. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பதாக சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை சினிமாவில் மட்டுமல்லாமல் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருக்கிறது என்றார்.