இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் அவரது மகன் மனோஜ் நடித்த ‘தாஜ்மஹால்’ திரைப்படம் உள்பட ஒருசில படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை ரீனா

சமீபத்தில் இவருக்கும் ஷிவம் திவார் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு நாடு நாடாக கணவருடன் சுற்றிவரும் நடிகை ரீனா, தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் டூபீஸ் நீச்சலுடை படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கோவா பீச்சில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.