சிவகார்த்திகேயனுடன் ஆரம்ப காலகட்டத்தில் நடித்தவர் நடிகை ரெஜினா, சில வருடங்கள் படமே இல்லாமல் இருந்தார். தெலுங்கு திரையுலகில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார். இதனால் நிறைய படங்கள் இவருக்கு குவிந்தன.

தமிழிலும்  ஓரளவு ரவுண்டு வர துவங்கினார், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், மிஸ்டர் சந்திர மெளலி உள்ளிட்ட படங்களில் அதிக கவர்ச்சி காட்டி நடிக்க துவங்கினார்.

கிகி சேலஞ்ச் உள்ளிட்ட சேலஞ்ச் மூலமும் புகழ்பெற்றார்.விரைவில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்கும் ரெஜினா. அதிலும் குறிப்பாக ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ரெஜினா.

வளர்ந்து வரும் நேரத்தில் ரெஜினா அம்மாவாக நடிக்கவிருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.