திருமணமாகி பல வருடங்களுக்கு பிறகு ரேவதி பெற்றெடுத்த பெண் குழந்தை

மண்வாசனை படத்தின் மூலம் அறிமுகமான ரேவதி சுரேஷ் மேனனை மணம் முடித்தார். சில வருடம் கழித்து விவாகரத்தும் இவர்களுக்கு ஆனது. திருமணமாகி பல வருடம் குழந்தை இல்லாமல் இருந்த ரேவதி. சில வருடங்களுக்கு முன் டெஸ்ட் ட்யூபில் குழந்தை பெற்றிருக்கிறார்.

இருப்பினும் அதை தத்தெடுத்த குழந்தை என்றே பலர் நினைத்திருக்க,தற்போது ஐந்து வயது ஆகி இருக்கும் வரை வளர்த்து வருகிறார். சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்த ரேவதி

தாய்மை என்பது ஒரு பெண்ணின் முழுமை. அதற்காக ஏங்கியிருக்கிறேன். எனவே, டெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பமடைந்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். அவள் பெயர் மஹி. அவளை நான் தத்தெடுத்து வளர்ப்பதாக வதந்தி பரவுகிறது. அதில் உண்மை இல்லை. அவளுக்கு தற்போது 5 வயது. அவளே என் சந்தோஷம். அவளே என் உலகம். யாரிடமும் இதுபற்றி நான் பேசியதில்லை” என ரேவதி கூறியுள்ளார்.
அவருக்கு குழந்தை இருக்கும் விஷயம் இப்போதுதான் எல்லோருக்கும் தெரியவந்துள்ளது.