எனக்கு சுட்டு போட்டாலும் வெட்க பட தெரியாது – ரித்திகா சிங்

11:52 காலை

விளையாட்டு துறையில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர் ரித்திகா சிங். இவர் நடித்த முதல் படமான இறுதி சுற்று படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார் மேலும் இதற்கு தேசிய விருது பெற்று தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

Loading...

தற்போது பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்து வெளிவர உள்ள சிவலிங்கா படம் குறித்து சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ரித்திகா சிங் மூன்று வயதிலிருந்து கராத்தே,பாக்சிங் போன்றவற்றை கற்று வருகிறார். இவருக்கு டான்ஸ் சுத்தமாக தெரியாது எனவும் டான்ஸ்க்கு அதிக பயிற்சி எடுக்க வேண்டுமென கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் பாடல் காட்சிக்கு புடவை கட்டி ஆடியது மிகவும் சிரமமாகவும், வித்தியாசமாகவும் இருந்ததாக தெரிவித்தார்.

இந்த படத்தில் பாடல் காட்சிகளுக்கு தேவைப்பட்டதால் அதற்கு ஏற்ற உடைகளை அணிந்து நடித்திருப்பதாகவும் ஆனால் இது ஆபாசமாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் லாரன்ஸ் மாஸ்டருடன் டான்ஸ் ஆடுவது எளிதான விஷயம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் இவரிடம் வெட்க பட தெரியுமா என கேட்ட போது, “சத்தியமா தெரியாது நான் எதற்கு வெட்கப்பட வேண்டும்? திருமணத்தன்று மணமேடையில் இருக்கும் போது கூட வெட்கப்படமாட்டேன். அதெல்லாம் எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது” என கூறியுள்ளார்

(Visited 52 times, 1 visits today)
The following two tabs change content below.
மோகன ப்ரியா
இவர் 2 ஆண்டுகளாக சினிமா தளத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பொழுதுபோக்கு செய்திகள் தருவதில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கு பதிவுகளை உடனுக்குடன் செய்திகளாக உருவாக்கி தளத்தில் பதிவிட்டு வருகிறார். நகைச்சுவையான மீம்ஸ்கள் உள்ளிட்ட சில பிரிவுகளை இவர் கவனித்துவருகிறார். தொடர்புகொள்ள- moghnaselvaraj@gmail.com