அமைச்சர் பதவி வழங்கப்படாததால் அப்செட்டில் இருந்த நடிகை ரோஜாவுக்கு முக்கியமானப் பதவியை வழங்கி சமாதானப்படுத்தியுள்ளார் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

ஆந்திராவில் கடந்த மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதியில் நடந்த 151 தொகுதிகளில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த முறை ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி 24 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதையும் படிங்க பாஸ்-  இசையுலகில் 25 வருடங்களை கடந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்....

இந்த பிரம்மாண்ட வெற்றியை அடுத்து ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி பதவியேற்றார். அதன் பின்னர் 5 துணை முதல்வர்கள் உள்பட 25 மந்திரிகள் பதவி ஏற்றனர். ஜெகன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதிருந்தே அவருடன் தீவிரமாகப் பணியாற்றிய ரோஜாவுக்கு அமைச்சரவையிலோ அல்லது துணை முதல்வராகவோ பதவி வழங்கப்படும் என எதிர்பர்க்கப்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  நடிகை ரோஜா வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

ஆனால் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. இதனால் ரோஜா அதிருப்தியில் இருப்பதாக ஆந்திர ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டனர். இந்த விவகாரம் பெரிய அளவில் விவாதிக்கப்படுவதை உணர்ந்த ஜெகன் நேற்று ரோஜாவை அழைத்து ஆந்திரப் பிரதேச தொழிற்துறை உள்கட்டமைப்புக் கழகத்தின் தலைவராக ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்பொறுப்பை ரோஜாவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  ஜெகன்மோகன் ரெட்டி வேடத்தில் நடிக்கிறேனா? கார்த்தி விளக்கம்

ரோஜாவுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி அம்மாநிலத்தின் மிக முக்கிய நியமன பதவிகளில் ஒன்றாகும். தொழிற்துறை மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பாக நிலம் ஒதுக்குவதற்கான அனைத்து அதிகாரங்களும் இக்கழகத்திற்கே உள்ளது. இதனால் இப்போது ரோஜா சமாதானம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.