ஷங்கர் இயக்கிய அந்நியன், ஜெயம் ராஜா இயக்கிய ஜெயம் உள்பட பல படங்களில் நடித்த நடிகை சதா, தற்போது ‘டார்ச்லைட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பாலியல் தொழிலாளியாக சதா நடித்து வருகிறார். இந்த படத்தை அப்துல் மஜீத் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே விஜய், ப்ரியங்கா சோப்ரா நடித்த ‘தமிழன்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அப்துல்மஜித் இயக்கவுள்ள அடுத்த படத்தை சதா தயாரிக்கவுள்ளாராம். இந்த படத்தில் சதா ஒரு போல்டான பெண்மணி கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், இந்த கேரக்டரில் இதுவரை தமிழில் யாரும் நடித்ததில்லை என்றும் கூறப்படுகிறது

Loading...