பிரபல நடிகை அனு இமானுவேல் என்னை நான்கு பேர் காதலித்தார்கள் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த நடிகை அனு இமானுவேல், மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஷால், பிரசன்னா நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தால் அவருக்கு தமிழ் சினிமாவில் பல படங்கள் புக் ஆகியுள்ளன. அனு தனுஷ் படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் அனு இமானுவேல் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அதில் 4 பேர் என்னை காதலித்ததாக கூறி இருக்கிறார். ஆனால் நான் யாரையும் காதலிக்கவில்லை. வரும் காலங்களில் நான் காதலித்து தான் திருமணம் செய்துகொள்வேன் என அனு கூறினார்.