உன்னுடைய உள்ளாடை ட்ரான்ஸ்பரண்டாக உள்ளதா?: நடிகையிடம் கேட்ட இயக்குனர்

கடந்த சில வாரங்களாக தெலுங்கு திரையுலகம் கடும் கலக்கத்தில் உள்ளது. காரணம் நடிகை ஸ்ரீ ரெட்டி. கடந்த சில நாட்களாக அவர் தன்னை பாலியல் தொந்தரவு செய்தவர்களை புகைப்படங்களோடு சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். பாகுபலி ராணாவின் தம்பி மற்றும் பிரபல இயக்குனர்கள் என்று பட்டியல் நீள்கிறது. இதனால் பலர் கடும் பயத்தில் உள்ளனர். இவரது நடவடிக்கைகளுக்கு பலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளையும் கூறிவருகின்றனர்.

இதில் நடிகை சந்தியா நாயுடு கூற்இய விசயம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. தெலுங்கில் பிரபல நடிகையாக இருந்து வந்த இவர் கடந்த 10 வருடங்களாக எங்கு சென்றார் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

அவர் கூறியபோது, பொதுவாகவே எனக்கு அம்மா, அத்தை, அக்கா போன்ற கதாபாத்திரங்கள் தான் தேடி வரும். நானும் அதனை ஏற்று நடித்துக்கொடுப்பேன். படப்பிடிப்பு தளத்தில் வாங்கம்மா, போங்கம்மா என்று பேசும் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் இரவு நேரத்தில் படுக்கைக்கு அழைப்பார்கள். அதிலும் ஒரு இயக்குனர், உன்னுடைய உள்ளாடையை கழட்டி காட்டு ட்ரான்ஸ்பரண்டாக உள்ளதா? என்று பார்க்க வேண்டும் என்று கேட்டார் என சந்தியா நாயுடு கூறினார்.