பேட்ட படத்தில் நடித்த போது ரஜினிகாந்த், சிம்ரன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாக வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், நவாஸுதின் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடந்த 3ந் தேதி வெளியான படத்தின் ‘மரண மாஸ்’ பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நேற்று சன் பிக்சர்ஸ் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயரை(ஜித்து) அறிவித்தது. இன்று நவாஸுதின் சித்திக் கேரக்டர் பெயர்(சிங்கார் சிங்) வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் பேட்ட குறித்து அப்டேட்டுகள் வருவதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில் பேட்ட ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை சிம்ரன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து எடுத்த  புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.