புதுப்பேட்டை படத்திற்கு பிறகு நடிகர் தனுஷுடன் இணைந்துள்ளார் பிரபல நடிகை.

 

வடசென்னை படத்தை அடுத்து நடிகர் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார்.’அசுரன்’ தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் 4 வது படமாகும். மேலும் தனுஷ் நடித்துள்ள ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதையும் படிங்க பாஸ்-  ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய் சந்தரும் விஜய் சேதுபதியும் இணைந்த புதிய படம்

கடந்த 2016 ல் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கொடி’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைதொடர்ந்து தற்போது இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ் . நேற்று குற்றாலத்தில்  இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.  இப்படத்தை சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  மீண்டும் முன்னணி நடிகருடன் ஜோடிசேரும் சினேகா!

இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடிக்கின்றார். 13 ஆண்டுகளுக்கு முன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘புதுப்பேட்டை’ படத்தில்  தனுஷ்-சினேகா ஜோடி நடித்தது குறிப்பிடதக்கது.