பழம்பெரும் தமிழ், இந்தி நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54

தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட இந்தியாவின் பல மொழி திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி. இவர் நேற்று தனது கணவர் மற்றும் மகளுடன் துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தார்

இந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த தகவலை அவரது உயிர் பிரியும்போது உடனிருந்த அவரது கணவர் போனிகபூர் உறுதி செய்துள்ளார்

கடந்த சில ஆண்டுகளில் இங்கிலிஷ் விங்கிலிஷ், புலி, மாம் உள்பட ஒருசில படங்களில் நடித்த ஸ்ரீதேவியின் மரணம் அவரது ரசிகர்களுக்கு பேரிழப்பாகும்.