Home சற்றுமுன் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தனர் போலீஸ் மீது நடிகை குற்றச்சாட்டு

என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தனர் போலீஸ் மீது நடிகை குற்றச்சாட்டு

சில நாட்கள் முன் கோவையில் ஸ்ருதி என்ற இளம் நடிகை கைது செய்யப்பட்டார் இன்னும் வெளிவராத ஒரு திரைப்படத்தில் நடித்துள்ள ஸ்ருதி என்கிற இளம்பெண், முகநூல்  மற்றும் மேட்ரிமேனியல் இணையதளங்கள் மூலம் சென்னை, கோவை மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஐ.டி வாலிபர்களை தொடர்பு கொண்டு, திருமணம் செய்து கொள்வதாய் வாக்குறுதி அளித்து பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தார். இதற்கு அவரின் தாய் உட்பட மொத்த குடும்பமும் உதவியாக இருந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஸ்ருதி நேற்று ஜாமீனில் வெளியே வந்தபோது நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

என்னை சுந்தர் என்பவர் காதலித்தார்.  அவரின் காதலை நான் ஏற்கவில்லை. எனவே, என்னை பழிவாங்கவே அவர் பொய்யான புகார் கொடுத்துள்ளார். அதற்கான ஆதரங்கள் என்னிடம் உள்ளன ஆனால் அதை போலீசார் ஏற்கவில்லை.
என்னை போலீசார் விசாரிக்கும் போது பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். சைபர் கிரைம் பெண் இன்ஸ்பெக்டர்கள் இருவர் என்னிடம் உதவி கமிஷனரை அட்ஜஸ்ட் செய் என நெருக்கடி கொடுத்தனர் நான் அதற்கு மறுப்பு தெரிவித்த என்னை நிர்வாணமாக்கினர்  மேலும், அதை இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டினர். நிர்பயா போல் உன்னை கூட்டாக கற்பழித்து சாலையில் வீசி விடுவோம் என அங்கிருந்த போலீசார் மிரட்டினர்.
போலீசாரின் அத்துமீறல் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிப்பேன்” என அவர் தெரிவித்தார்.