மகாநதி, வால்டர் வெற்றிவேல், சின்னக்கவுண்டர், வண்டிச்சோலை சின்ராசு உள்பட பல படங்களிலும் ஒருசில சின்னத்திரை சீரியல்களிலும் நடித்த நடிகை சுகன்யா, பிரபல அரசியல் கட்சியால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சுகன்யாவின் பெசண்ட் நகர் வீட்டை வாடகை எடுத்த அந்த அரசியல் கட்சி கடந்த சில மாதங்களாக வாடகையும் தராமல், காலி செய்யவும் முடியாது என்று கூறியதால் அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளாராம்.

இதுகுறித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்திய அந்த கட்சி தலைவர்கள், வீட்டை காலி செய்து விடுகிறோம், வாடகை பாக்கியை மட்டும் கேட்க வேண்டாம் என்று கூறி வருகின்றார்களாம். இதனால் பணக்கஷ்டம், மனக்கஷ்டத்தில் சுகன்யா இருப்பதாக கூறப்படுகிறது.