தமிழில் சுப்ரமணியபுரம் படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் சுவாதி அதன் பிறகு நிறைய தமிழ்ப்படங்களில் நடித்துவிட்டார்.

இருந்த போதிலும் சுப்ரமணியபுரத்தில் அவர் புத்தகத்தை தூக்கி கொண்டு கல்லூரி செல்லும் 80களின் காட்சியும் பின்னணியில் இளையராஜாவின் சிறுபொன்மணி பாடல் ஒலிப்பதையும் என்றும் மறக்க முடியாது. இந்த காட்சிகளால் ரசிகர்கள் மனதில் மேடையிட்டு அமர்ந்து விட்டார் சுவாதி.

இந்நிலையில் அதிக தமிழ்ப்படங்களை தவிர்த்த சுவாதி, இந்தியன் ஏர்லைன்சில் பணியாற்றி வந்த தனது நண்பர் விகாசை காதலிக்க தொடங்கினார். கடந்த 30ம் தேதி முறைப்படி குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார்.

செப்டம்பர்2ல் திருமண வரவேற்பு நடக்கவிருக்கிறது.