trisha

பலருக்கும் இன்றும் கனவுக்கன்னியாக திகழும் திரிஷாவுக்கு திகல் கிளப்பும் விசயத்தில் நம்பிக்கை அதிகமாம்.

பல ஹீரோக்களுடன் ஜோடி போட்ட த்ரிஷா, தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த படங்களில் நடித்து வருகிறார்.

மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்திருக்கும் ‘மோகினி’ திரைப்படம் இன்று (ஜூலை27) ரிலீசாகி உள்ளது. ‘சிங்கம்-2’ படத்தைத் தயாரித்த பிரின்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. த்ரிஷா கதையின் நாயகியாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். த்ரிஷா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கும் முதல் படம் இதுதான். எனவே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மோகினி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பது குறித்து இயக்குனர் மாதேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் திட்டமிட்டபடி, ‘மோகினி-2’ படத்தை எடுத்தால், நிச்சயமாக நான் கதாநாயகியாக நடிப்பேன் என்று திரிஷா கூறினார்.

திரிஷாவுக்கு பேய் நம்பிக்கை இருக்கிறதாம். ஆனால், பேயுடன் எந்த அனுபவமும் இல்லை…பேயை பார்த்தால் பயந்து ஓட மாட்டேன்’’ என்று திகில் கிளப்புகிறார்.

சரித்திர கால நாயகி. ‘பாகுபலி’ அனுஷ்கா மாதிரி, ஒரு வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்பது த்ரிஷாவின் நீண்ட கால ஆசையாம்.