ஜெயலலிதா நினைவிடத்தில் திரிஷா அஞ்சலி

04:10 மணி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

இந்நிலையில் நடிகை திரிஷா இன்று ஜெயலலிதா நிஐவிடத்திர்கு சென்று அஞ்சலி செலுத்தினார். திரிஷாவுடன் அவரது தாய் உமா வந்தர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு அரசியல் மட்டுமல்ல திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பு என்று தெரிவித்தார்.

முதல்வர் உடல் ராஜாஜி ஹாலில் வைத்திருந்த பொழுது கூட்ட நெரிசல் காரணமாக திரிஷா அஞ்சலி செலுத்தாமல் திரும்பிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com