ஓரினச்சேர்க்கை உறவானது சட்டவிரோதம் அல்ல என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நேற்று உச்ச நீதிமன்றம் வழங்கியது. இதற்கு நடிகை திரிஷா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ன் படி ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் உறவுகொள்வது சட்டப்படி குற்றமாகும் என கூறப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து பல ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமல்ல எனக்கூறி அந்த சட்டப்பிரிவை நீக்கி தீர்ப்பளித்தது.

இதையும் படிங்க பாஸ்-  இனி அவர் படத்துல நடிக்கவே மாட்டேன்!பிரபல நடிகை.

இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு பலரும் தங்கள் வரவேற்பை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிரபல முன்னணி நடிகை திரிஷா தனது டுவிட்டர் பதிவில் #சமஉரிமை #பிரிவு377 #ஜெய்ஹோ போன்ற ஹேஸ்டேக்குகளுடன் இதைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தத் தீர்ப்பை வரவேற்று முன்னதாக யுனைடெட் நேஷன்ஸ் இந்தியா பதிவிட்டுள்ள பதிவையும் தனது பக்கத்தில் அவர் ரீட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  விபச்சார வழக்கில் சிக்கிய நடிகைக்கு பிரபல இயக்குனருடன் திருமணம்

திரிஷா மட்டுமல்லாமல் திரை பிரபலங்கள் கரன் ஜோஹர், சோனம் கபூர், பிரீத்தி ஸிந்தா, ஹியூமா குரேஷி என பலரும் இந்த தீர்ப்பை வரவேற்று தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.