தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நடிகையும், நடிகர் சரத்குமார் மகளுமான வரலட்சுமி இன்று சந்தித்தார்.

சென்னையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, தனது ‘ஷேவ் சக்தி’ என்ற பெண்கள் பாதுகாப்பு அமைப்பு குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் முதல்வரிடம் வரலட்சுமி விளக்கம் அளித்தார். மேலும் இந்த அமைப்பு நடிகைகள் மட்டுமின்றி பாலியல் தொல்லைக்கு ஆளாகும் அனைத்து பெண்களுக்கும் உதவும் என்றும் இந்த அமைப்பின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் முதல்வரிடம் தெரிவித்தார்.

இதையும் படிங்க பாஸ்-  சண்டக்கோழி 2 படத்தில் வரலட்சுமி கதாபாத்திரம் பெயர் என்ன

முதல்வரின் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வரலட்சுமி, ‘பாலியல் வன்கொடுமைகளால் பெண்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மாவட்டம் தோறும் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 6 மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் இந்தக் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் தெரிவித்திருப்பதாகவும் அவர் சொன்னார்.