பிரச்சாரத்திற்கு 4 ஃபுல் பாட்டில் வேணும் – அலறவிட்ட புஷ்டி நடிகை

சினிமாவிலிருந்து ஒதுங்கிய பின் அரசியலில் ஆர்வம் காட்டி வரும் அந்த புஷ்டி நடிகை பற்றி ஒரு புதிய கிசுகிசு கசிந்து வருகிறது..

தற்போதெல்லாம் அவர் மது போதையில்லாமல் வெளியே வருவதில்லையாம். ஆந்திர அரசியல் பக்கம் சென்ற அவர், பிரச்சாரத்திற்கு செல்ல நேரிட்டால் கட்டணத் தொகை தவிர்த்து, வெளிநாட்டு ஸ்காட்ச் பாட்டில் வேணும் என கேட்டு வாங்கிக் கொள்கிறாராம்.

பெங்களூரில் அவருக்கு ஒரு பண்ணை வீடு இருக்கிறது. அங்குதான் பெரும்பாலும் தங்குகிறார். எனவே, அவரை தேடி வருபவர்களிடம் இப்படி வாங்கி வைத்த ஸ்காட்ச் பாட்டில்கள் ஒரு மது கடை போல் குவிந்து கிடக்கிறதாம்.

சமீபத்தில், கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட அரசியல்வாதிக்கு ஆதரவாக ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய, அந்த நடிகையை அழைத்துள்ளனர். தனக்கென கட்டணம் தவிர ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள அந்த வெளிநாட்டு ஸ்காட்ச் பாட்டில் 4 வேணும் என கேட்டாரம். அதுவே ரூ.2 லட்சம் வருகிறதே என யோசித்த அரசியல்வாதி, அந்த நடிகையே வேண்டாம் எனக்கூறிவிட்டாராம்.