எம்டன் மகன் படத்தில் நடித்த துணை நடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ராணி காவல் நிலையத்தில் அளித்த புகாரை அவர் வாபஸ் பெற்றுள்ளார்.

நாட்டாமை படத்தில் டீச்சர் வேடத்தில் நடித்த நடிகை ராணி, சீரியலில் தன்னுடன் நடிக்கும் சண்முகராஜன் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், இதற்கு மறுப்பு தெரிவித்ததால் சண்முகராஜன் என்னை தாக்கினார் எனவும்  காவல் நிலையத்தில் இன்று மாலை புகார் அளித்தார். சண்முகராஜன் சிவாஜி, எம்டன் மகன், விருமாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திடீரென்று ராணி காவல் நிலையத்திற்கு சென்று சண்முகராஜன் மீதான பாலியல் புகாரை வபஸ் பெற்றுள்ளார். இதனால் கடுப்பான சிலர் சினிமா துறையில் என்னத்தான் நடக்கிறது என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.