பாராட்டு விழாவில் சாயிஷா, பவானிசங்கரை திட்டிய இயக்குனர்!

priyabhvnishankar

கார்த்தி நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் படமானது நல்ல வரவேற்பை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது. விவசாயத்தை மையக்கருவாக வைத்து வெளியாகி உள்ள இந்த படத்தை பார்த்து அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறாரகள். அரசியல் தலைவா்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. துணை ஐனாதிபதி கடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டி உள்ளார். வெற்றி பெற்ற காரணத்திற்காக நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினா் விழாவை நடத்தினார். இந்த விழாவில் படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

விழாவில் இயக்குனர் பாண்டிராஜ் பேசியதாவது, படத்திற்காக என்னனென்ன கஷ்ட நஷ்டங்களை சந்தித்தோம் என்பது குறித்து கூறினார். படம் வெளி வரும் நேரத்தில் படத்திற்காக பீட்டா அமைப்பு செய்த பிரச்சனை பற்றியும் மிகவும் கோபத்துடன் கடுமையாக சாடி பேசினார். அதோடு அவருடைய கோபம் நிற்காமல் படத்தின் கதாநாயகிகளான சாயிஷா மற்றும் பிரியா பவானி சங்கர் மீது அதிகமாக இருந்தது. பிரியா பவானி சங்கர் படப்பிடிப்பு தளத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வருவது என்று கோபத்துடன் குறை கூறினார். அதுபோல படத்தின் புரோமோஷன் வேலைகளில் இனிமேலாவது கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கடைக்குட்டி சிங்கம் படமானது அனைவரது பாராட்டை பெற்ற நிலையில், நாயகிகள் சாயிஷா மற்றும் பிரியா பவானி சங்கர் இருவருக்கும் இயக்குனரிடமிருந்து வந்த குறை அவர்களின் மனத்தை மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும்.