சினிமாவில் எத்தனையோ தொழில்நுட்பங்களை கையாண்டு புதுமை படைத்து வருகின்றனா். அந்த வகையில் புது டெக்னிக் ஒன்றை புகுத்தி உள்ளனா் இயக்குநா் ஆதிக் மற்றும் ஜி.வி பிரகாஷ். தமிழ் சினிமாவில் இதுவரை திரைப்படங்கள் 2D அல்லது 3D இந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தான் தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் ஆதிக் ஒரு புது முயற்சியை கையாண்டுள்ளார்.

ஏற்கனவே இசையமைப்பாளா் மற்றும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்யை வைத்து த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கினார். அதன் பின் சிம்புவை வைத்து இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படமானது அவருக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தரவில்லை. இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் ஜி.வி பிரகாசுடன் கைகோர்த்து உள்ளார். தற்போது ஜி.வியை வைத்து ஒரு படத்தினை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் தான் அந்த புது டெக்னிக்கை பயன்படுத்தி உள்ளார். இந்த படத்தின் இரண்டாம் பாதியில் 3டி தொழில்நுட்பம் கட்டாயமாக தேவைப்படுகிற காரணத்தால் படத்தின் முதல் பாதியில் 2டி தொழில் நுட்பத்திலும், இரண்டாம் பாதி கதையை 3டிதொழில் நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இது வரை யாரும் இந்த மாதிரி டெக்னிக்யை பயன்படுத்தி தமிழ் சினிமாவில் படங்கள் வெளிவரவில்லை என்ற காரணத்தால் இந்த புது முயற்சிக்கு ரசிகா்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கும் என்பதை படம் வந்த பிறகு தான் தெரியும்.