திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், மீண்டும் இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷுடன் இணைந்துள்ளார்.

அடல்ட் ஒன்லி படமாக இருந்தாலும், திரிஷா இல்லனா நயன்தாரா படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பின் சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார் ஆதிக். ஆனால், அப்படம் விமர்சன ரீதியாக கழுவு கழுவி ஊற்றப்பட்டது. மேலும், பாக்ஸ் ஆபிசில் படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில், தன்னுடைய முதல் பட ஹீரோவான ஜீ.வி.பிரகாஷை மீண்டும் இயக்குகிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.  அப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் தற்போது நடைபெற்று வருகிறது. அப்படத்திற்கு ‘வெர்ஜின் மாப்பிள்ளை’ அல்லது ‘திரிஷா இல்லனா நயன்தாரா 2’ என பெயர் பரிசீலனையில் இருக்கிறதாம்.

அடல்ட் ஒன்லி ரசிகர்களுக்கு மீண்டும் கொண்டாட்டம்தான்…