அஜித் நடிப்பில் வெளி வந்த விவேகம் படத்திற்காக ரொம்ப கஷ்டப்பட்டு அதுவும் ரிஸ்க் எடுத்து நடித்ததன் மூலம் காலில் அடிப்பட்டது. அந்த வலியை கூட தாங்கி கொண்டு நடித்து கொடுத்தாா் அஜித். ஏற்கனவே நிறைய ஆபரேஷன்களை செய்து கொண்டு அங்க அங்க இரும்பு தகடு பொருத்தி கிட்டத்தட்ட ஒரு நடமாடும் இரும்பு ரோபோ மனுஷன் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறாா்த அஜித்.

அவா் ஒவ்வொரு படத்திற்காக டூப் இல்லாமல் ரியலாகவே எல்லாம் காட்சிகளையும் நடித்து வருகிறாா். இப்படி ரொம்ப ரிஸ்கான காட்சிகளுக்காக மனுஷன் இப்புட்டு மெனக்கெட்டு நடிக்கும் ஏற்படும் விழுப்புண்கள் ஏராளம். அதனால் தான் இப்படியான இரும்பு பிளேட்டுகளால் அவரது அங்கம் நிரம்பி இருக்கிறது. நம்ம ஈஸியாக விவேகம் படம் ஹாலிவுட் பாணியில் உள்ளது. நம்ம ஊருக்கு இதுஎல்லாம் சாிபட்டு வருமா என்று விமா்சனம் செய்து விடுகிறோம். ஆனால் விவேகம் படத்திற்காக பல்கோியாவில் பல்வேறு ரிஸ்கான காட்சிகளை மட்டும் எடுத்து பட்டியல் இட்டால் தொிந்து விடும். மனுஷன் எவ்வளவு சிரமப்பட்டு, கஷ்டப்பட்டு, எந்த தூரத்திற்கு ரிஸ்க் எடுத்துள்ளாா் என்று தொிந்து விடும்.

அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு நடித்து கொடுத்து வந்து விட்டாா் அஜித். ஆனா தாயகம் திரும்பி பிறகு தான் அவருக்கு ஏற்பட்டுள்ளது சிக்கல். உடம்பு அந்த அளவுக்கு பாடாய் படுத்தி விட்டது. தோள்பட்டை வலியை பொறுத்துக்கொண்டு இருந்து நடித்தாா். தற்போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தின் வீரியம் அதிகமாகி ஆபரேஷன் செய்யும் நிலைக்கு கொண்டு விட்டுள்ளது. அவரை பாிசோதித்த மருத்துவா்கள் உடனடியாக ஆபரேஷன் செய்து விடலாம் என்று கூறியதால், சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. எப்படியோ அஜித் ஒரு வழியாக வெற்றி கரமாக ஆபரேஷன் செய்து நலமாக இருப்பதாக மருத்துவமனையில் கூறப்பட்டுள்ளது.