அதிமுக, தேமுதிக இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைக்க திட்டமிட்டிருப்பதாக செய்தி கசிந்துள்ளது.

2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி அமைத்தது. அதில், தேமுதிக சில இடங்களில் வெற்றி பெற்றது. விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராகவும் அமர்ந்தார். ஆனால், சட்டசபையில், அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும், அவருக்கும் இடையே எழுந்த மோதலால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டணி முறிந்தது. அதன்பின் விஜயகாந்துக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு, அரசியலில் அவர் தீவிரமாக செயல்பட முடியாத நிலையில் இருக்கிறார்.

ஏறக்குறைய கட்சி பணிகளை பிரேமலதாவே கவனித்து வருகிறார். விஜயகாந்த் தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். கூடவே பிரேமலதாவும் சென்றுள்ளார். எனவே, கட்சி பொறுப்புகளை அவரின் மகன் பிரபாகன் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் அதிமுக – தேமுதிக கூட்டணி மீண்டும் அமைய வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதுரையில் திமுகவிற்கு எதிராக பிரேமலதாவை களம் இறக்கும் திட்டமும் அதிமுகவிற்கு இருக்கிறது என செய்திகள் கசிந்துள்ளது.