நடிகரும், விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பவருமான ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி சென்றார். அப்போது அவர் விஷக்கிருமிகளான சமூகவிரோதிகளால் தான் தூத்துக்குடியில் கலவரம் ஏற்பட்டதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், இந்த விஷக்கிருமிகளையும், சமூக விரோதிகளையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும், அதனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக செய்தார் என அதிமுகவுக்கு பாராட்டுப்பத்திரம் வாசித்தார். தற்போது உள்ள அரசும் அதனை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து அதிமுகவை பாராட்டிய ரஜினியை உச்சிமுகர்ந்து பாராட்டும் விதமாக அதிமுக நாளிதழான நமது அம்மா, காலிகள் ஒழிப்பும்… கபாலியின் வாழ்த்தும்… என கட்டுரை வெளியிட்டு ரஜினியின் பேச்சை ஆகா ஓகோவென்று பாராட்டுகளை பொழிகிறது.

அந்த கட்டுரை பின்வருமாறு….