அதிமுக – பாஜக கூட்டணியில் மொத்தம் 9 கட்சிகள் இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி ஏறக்குறைய முடிவாகி விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது. திருப்பூருக்கு பிரதமர் மோடி வரும்போது, அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனத்தெரிகிறது.

இந்நிலையில், மொத்தத்தில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் கட்சி, ஏ.சி.சண்முகம் கட்சி, தனியரசு கட்சி என மொத்தம் 9 கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கவுள்ளது தெரியவந்துள்ளது.