ADMK Alliance : தேமுதிகவின் நடவடிக்கையால் கோபமடைந்த அதிமுக 2 சீட் மட்டுமே கொடுக்க முடியும் எனக்கூறி தேமுதிகவிற்கு அதிர்ச்சி கொடுத்ததாக செய்தி கசிந்துள்ளது.

அதிமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, திமுகவிடம் தேமுதிக ரகசிய பேரம் பேசியதை துரை முருகன் செய்தியாளர்கள் மத்தியில் போட்டு உடைத்தார். இது தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிமுகவுகும் அதிருப்தியை கொடுத்துள்ளது. எனவே, கூட்டணி பேச்சுவார்த்தையில் இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

மேலும், கிடைத்த சர்வே படி தேமுதிகவிற்கு 2 லிருந்து 3 சதவீத வாக்குகள் மட்டுமே இருக்கிறது என்கிற முடிவுக்கு வந்த அதிமுக தரப்பு, 4 சீட் மற்றும் ஒரு ராஜ்ய சபா என பேசியதை மாற்றி தற்போது 2 சீட் மட்டுமே தர முடியும் என தேமுதிகவிடம் கறாராக கூறியதாக தகவல் கசிந்துள்ளது. இது, பிரேமலதாவுக்கும், சுதீஷுக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாகவும், டெல்லி பாஜக தலைமை மூலம் வேண்டியதை பெறும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், திமுகவிடம் ரகசிய பேரத்தில் சுதீஷ் ஈடுபட்டுள்ளதால், அதிருப்தியில் இருக்கும் டெல்லி பாஜக தேமுதிகவிற்கு வளைந்து கொடுக்கவில்லை. எனவே, என்ன செய்வதென்று தெரியாமல் தேமுதிக முழித்து வருகிறது.